பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக்க அன்புடன் அனுப்பிய அவர்களது பெரு நன்றிக்கு காம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அச் சேப்புப் பட்டயப் பகுதி இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட் டுள்ளது. (இந்த மூலப் பட்டயத்தை அந்நூலில் இன் றும் காணலாம்.) அப்பட்டயத்தினுல் நாம் அறிந்து கொள்வது யாதெனில், காவிரிப்பூம்பட்டினம் முதலிய துறைமுகங்களில் தமிழரில் சிலர் கிறித் துமதக் குருமார் சொற்கேட்டு அச்சமய நெறி நின்றனர். கி. பி. 293வது ஆண்டிற்கு முன்னேயே அவ்விடத்தில் சைவக் கிளர்ச்சி ஏற்பட்டது. மாணிக்கவாசகப் பெருமானுடைய அடி யார்கள். மேலேக்கரை முதல் கீழ்க்கரை வரையிலுள்ள பல இடங்களிலும் திருவருளில்ை பலவகை அருஞ் செயல்களை இயற்றிச் சைவத்தை வளர்த்தனர். ஆய காலைக் கிறித்து மதத்திலிருந்தும் பலர் ஆவில் ஐந்தும் உட்கொண்டு ஐந்தெழுத்தோதிச் சிவநெறிக்கு மீண்ட னர். மலேயாள நாட்டில் மேலேக்கரையிலுள்ள குரக்கணி என்னும் (கொல்லம்) இடத்திற்கு அருகில் சிவநெறி மீண்டார்க்கும் மீளாதார்க்கும் பிணத்தை அடக்கம் செய்யும் முறையைப்ப்ற்றி ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் முன்னேயோர் பின்னையோரினின்றும் விலகி மணிக்கிராமம் என்னும் ஒரு தனி ஊர் ஏற்படுத்தி அதன் கண் வாழ்ந்தனர் என்பதே."

மாணிக்கவாசகர் மூவர்க்கும் முற்பட்டவர் என்ப தற்குத் திருகாவுக்கரசருடைய வாக்குகளே போதுமான சான்ாகும். அவர் நன்கு வெளிப்படையாகத் தமது பாடல்களில் இவரைப்பற்றிய குறிப்புக்களே எடுத்தும் காட்டியுள்ளார்.

3