பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானை.

என்றும் பாடியிருப்பதிலிருந்து நன்கு உணரலாம்.

திருப்பெருந்துறை என்னும் திருப்பதி மணிமொழி யார் காலத்தில்தான் சிறப்புற்றதே அன்றி, அதற்கு முன் அன்று. அவர்தாம் அங்கு ஆலயம் எடுத்தவர். அதன் பின்பே ஒரு சிறந்த rேத்திரமாகக் கருதப்பட்டது. அச் rேத்திரத்தையும் இணைத்தே தாண்டக வேந்தர் தம் கேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில்,

ஆவூர் மூலட் டானம் ஆனைக் காவும்

ஆக்சுடரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் போாஆரும்

பெருந்துறை காம்பிலி பிடஆர் பேனும் கூரார் குறுக்கை வீாட் டானமும்

கோட்ர்ே குடமூக்குக் கோழம்பமும் காாார்கழுக் குன்றும் கானப் பேரும்

கயிலாய நrதனையே காண லாமே.

என்று குறிப்பிட்டார்.

திருப்பெருந்துறைக்கும் திருவாதவூரருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பட்டினத்தடிகளும், 'திருந்திய அன்பில் பேருந்துறைப் பிள்ளையும்' என்றே குறிப்பிட் டுள்ளனர்.

ஆகவே, தேவாரத்தில் மணிமொழியாரைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுதலின், மணிமொழியார் மூவர்க் கும் முற்பட்டவர் என்பதில் ஐயம் எழ இடம் இல்ல என்க.