பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மணிமொழியார் அடியார் கூட்டத்தில் இருக்கவே அவாவுவர்

'திருவாதவூரர் தொண்டர் கூட்டத்தில் இணைத்தும் பேசுதற்குரியர் அல்லர். அவர் அறிவால் சிவனே ஆன வர். இதல்ைதான் சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் கூருது விடுத்தனர் ” என்று ஒரு சிலர் கூற முற்படுவர். இந்தக் கருத்தை நிலைநாட்டுதற்கு மேற் கோளாக, இலக்கணக்கொத்து உரையில் கூறப்படும் மாணிக்கவாசகர் அறிவால் சிவனே ' என்பதை எடுத் துக் காட்டுவர். யாண்டேனும் மணிவாசகப்பெருமானர் தமது நூலகத்துத் தாம் அறிவால் சிவனே' என்று கூறியுள்ளாரா என்பதை ஆராய்தல் வேண்டும். இவ் வாறு அவர் யாண்டும் கூறிற்றிலர். அவரது நூலை கன்கு அலசி அலசிப் பார்க்குங்கால், தாம் அடியார் கூட்டத்துள் ஒருவராகவே இருக்க ஆசைப்பட்டார் என்பது நன்கு புலகுைம்.

உடையாள் உன்தன் நடுஇருக்கும் உடையாள் நடுவுள் நீஇருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானல் அடியேன் உன் அடியார் திடுவுள் இருக்கும்.அரு ளைப்புரியாய்பொன் னம்பலத்தென் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.

என்றும்,

செடியார் ஆக்கைத் திறம் அற வீசிச் சிவபுர நகர்புக்குக் கடியார் சோதி கண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப்

படிதான் இல்லாப் பாம்பா னேஉன் பழஅடி யார்கூட்டம் அடியேன் காண ஆன்சப் பட்டேன் கண்டாய் அம்மானே

என்றும்,