பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

உற்ற ஆக்கையின் உறுப்ொருள் நறுமலர் எழுத்ரு காற்றம்ப்ோல் மற்ற லாவதோர் நிலையிலாப் பாம்பொருள் அப்பொருள்பாாாதே பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.

என்றும்,

நாயேன் அடிமை உடனுக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ

என்றும் திருவாசகத்தில் வரும் பாடல்களைக் கண்டால், மணிமொழியார் அடியார் இன்த்தில் இருக்கும் பேற் றினேயே விரும்பி நின்ருர் என்பது பெறப்படும். அச் சோப் பதிகத்தில் எனயாண்ட ' என்று கூறும் இடங் களில், தம்மை இறைவர் அடிமையாக்கி ஆட்கொண்ட தையே குறிப்பிட்டுச் சென்ருர். இறைவனரும் அடியா ராகவும், அடியார் இனத்து இருக்க விருப்பம் உள்ளவ ராகவும் இருக்கின்ருர் என்பது, சுந்தரருக்குத் திருவாரூரில் அடியெடுத்துக் கொடுத்த குறிப்பால் உணரலாம். திரு வாரூர்த் தியாகேசர், ஏன் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் ” என்ற அடியினே எடுத்துக் கொடுத்தனர் அதில்தான் அரிய குறிப்புக் காணப்டடு கிறது. தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர். அம் மூவாயிரம் என்னும் தொகை தில்லை நடராஜப் பெரு மானையும் இணைத்தபோதுதான் எண்ணிக்கையில் சரி யாகும். ஆகவே, நடராஜரும் தில்லைவாழ் அந்தணர்க ளான தொண்டர்களில் ஒருவர் என்பது தெரிகிறது. இங்ங்ணம் தாமும் தொண்டராக இருக்கும் நிலையினே உணர்த்தவே தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியினை எடுத்துக் கூறினர். இறை வர் அடியார் இனத்துள் இருப்பவர் என்பதை நம் திரு முறைகள் விளக்கமுறக் கூறியுள்ளன. அப்பர் பெருமா