பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று நாட்டும் பகுதியும் (ii) மாணிக்கவாசகர் மூவர்க்கும் பிற்பட் டவர் என்னும் கூற்றினை மறுக்கும் பகுதியும், (iii) அவர் மூவர்க்கும் முற்பட்டவரே என்பதற்குப் பல காாணங்கள் காட்டும் பகுதியும், (iv) சேக்கிழார் பொய்யடிமை இல்லாத புலவரைச் சங்கப் புலவாாகக் கருகிலர் என்னும் பகுதியும் சிறப்பு வகையில் கவனிக்கக் தக்கவை. கலையார் அரிகேசரியாய் போற்றி ' என்னும் மணிவாச கத்திலிருந்து அரிகேசரி கல்லூர்க் கல்வெட்டில் கானும் அரிகேசரி மாறவர்மன் என்னும் 7 ஆம் நூற்ருண்டு பாண்டிய மன்னன் காலத் திற்குப் பிற்பட்டவர் மணிவாசகர் என்று ஒர் ஆராய்ச்சியாளர் முடிவு காட்டினர். இதனை இந்நூலாசிரியர் காழிதாண்டவராயர் எழுதிய திருவாசக வியாக்யானத்தில் அரிகேசரி ' என்பதற்கு அடியோடு வேறு பொருள் கொள்ளப்பட்டிருப்பதை எழுதிக்காட்டி மறுத்திருப் பதும் கவனிக்கத்தக்கது. திருவாசக முழுவதற்கும் விரிவான உரையைச் சில்லாண்டுகட்கு முன்னர் எழுதிய பேராசிரியர் நவநீத கிருஷ்ண பாாதியாரும் மணிவாசகர் மூவர் முதலியவர்கட்கு முற்பட்டவர் என்றே மொழிந்துள்ளார். எனது ஆராய்ச்சியிற் புலப்பட்ட உண்மையும் இதுவே.

இந்நூலின் இறுதிப் பகுதியாய் அமைந்துள்ளது, ' கிருவாச கமும் பெரியபுராணமும்” என்பது. இதன்கண் சேக்கிழார் பெருமான் திருவாசகத்தில் பெரிதும் ஈடுபட்டிருக்கதைக் காட்டப் பல சான்று கள் சாப்பெற்றுள்ளன. இத்துறையில் இவ்வளவு விரிவாய் வேறெ வரும் எழுதியிருப்பதாக யான் அறிந்திலேன். இப்பகுதியைப் படிப்பது சரும்பை துனியிலிருந்து அடிவுரையில் சுவைத்துக்கொண்டு போவது போற் காண்கின்றது. இந்த இருபத்தொன்பது பக்கங் களும் சிறப்பு வகையில் அனைவரும் படித்து இன்புறத் தக்கவை. தமிழ் ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர்கட்கும் இந்நூல் பயன் படக் கூடியதாகும்.

இவ்வாசிரியர் சிறந்த தமிழ்ப் புலமையும் வாதத்திற்குரிய பொருள்களையும் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையும், அழுத்த மான தெய்வப்பற்றும், தாய நற் சிந்தையும் உடையவர் என்று இந்நூல் இனிது காட்டுகின்றது. இவர் இத்தகைய நூல்கள் பல இன்னும்