பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ருைம் "வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத் தகத்தான்' என்றே பாடியுள்ளார். இங்கனம் இருக்க, ' மணிமொழியார், அடியவர் அல்லர். அவர் அறிவால் சிவனே ஆனவர் ஆதலின், அடியார்களைப் பற்றிக் குறிப் பிடும் திருத்தொண்டத் த்ொகையில் கூறப்பட்டிலர் என்பது பொருந்தாது. ஆகவே, சுந்தரர் பொய்யடிமை இல்லாத புலவர் என்றது மணிமொழியாரையே என்க.

பொய்யடிமை இல்லாத புலவர் என்று கூறப்பட்டதன் நோக்கம்

ஈண்டும் ஒரு தடையினே எழுப்ப அன்பர் சிலர் முந்தக்கூடும். அதாவது ' கம்பி ஆரூரர், தமது திருத் தொண்டத் தொகையில் மாணிக்கவாசகர் என்ருே, திரு வாதவூரர் என்ருே வெளிப்படையாகக் கூருது, பொய் யடிமை இல்லாத புலவர் ' என்று குறிப்பிட்டிருப்ப தால், அத்தொடர் மணிமொழியாரை எவ்வாறு உணர்த் தும்' என்பதாம். வன்ருெண்டப்பெருந்தகையார் குறிப் பிட்ட அடியவர்கள் பெயர்கள் யாவும் இயற்பெயர்கள் அல்ல. அவற்றுள் பல காரணப் பெயர்களே ஆகும். அவை யாவும் அவர் அவர்களின் இயல்புகளை விளக்கும் பெயர்களாக இருக்கின்றன. இயற்பகை காயனர், மெய்ப் பொருள் நாயனர் என்பன போன்ற பெயர்கள் அங் காயன்மார்களின் அரும்பெருஞ் செயல்களால், இயல்பு களால் ஏற்பட்ட திருப்பெயர்கள். இந்த முறைக்கிணங் கவே,ஈண்டுச் சுந்தரமூர்த்திசுவாமிகள் மணிமொழியாரது திருப்பெயரை வெளிப்படையாகக்கூருது, அவரது இயல் பைச் சிறப்பிக்கும் முறையில், பொய்யடிமை இல்லாத புலவர் என்று குறிப்பிட்டுச் சென்றனர் என்க. அற் ருயின் மணிமொழியாரை மட்டும் ஏன் பொய்யடிமை