பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

இல்லாத புலவர் எனச் சிறப்பித்தல் வேண்டும்? மணி மொழியார் பொய்யடிமை இல்லாத புலவர் எனில், ஏனைய அடியவர்கள் பொய்யடிமை யுடையவர் என்பது பெறப்படாதோ ?” என்று கடாவவும் கூறும். இவ் வாறு வினவுபவர்கட்கு, கம்பியாரூரது திருவாக்கைக் கொண்டே விடையிறுத்தல் சாலவும் பொருத்தமாகும். ஆளுடைய நம்பிகள் இயற்பகை நாயனரைப் பற்றிக் குறிப்பிடுங்கால்,"இல்லையே என்னுத இயற்பகை' என்று குறிப்பிட்டனர். இங்ங்ணம் இயற்பகையாரைக் குறிப் பிட்டதல்ை, ஏனைய நாயன்மார்கள் தம்மை அடுத்துக் கேட்டவர்கட்கு இல்லே என்று கூறியவர்களா என்பதை யும் நாம் கேட்டுக் கொள்ளுதல் வேண்டும். தொண்டர் களின் வாழ்க்கை வரலாற்றில் எக்தத் தொண்டரும், தம் மிடம் வந்து கேட்டவர்கட்கு இல்லை என்று உரைத்ததா கக் கண்டிலம். தம்மை அணுகியவர் விரும்பிக் கேட்டதை ஈந்தே புகழ் பெற்றனர். அவ்வாறு இருக்க, இயற்பகை யாரை மட்டும் இல்லையே என்று கூறியது பொருத்தம் இல்லே என்று கூறிவிடலாமா ? சுந்தரர்தம் திருவுள்ளத் தில் அடியார்களைப் பற்றிய கினேவு எவ்வெவ்வாறு எழுங் ததோ, அவ்வவ்வாறு திருவருள் துணைகொண்டு பாடிச் சென்றனர். அந்த முறையில் மணிமொழியாரைப் பற்றிக் கூறவந்த இடத்துச் சிறப்புப் பெயராகப் பொய்யடிமை இல்லாத புலவர் என்று கூறினர் என்க.

நாயன்மார் அறுபத்துமூவர்தாம் என்பது எவ்வாறு பொருந்தும் ?

மற்றும் சிலர், 'பொய்யடிமை இல்லாத புலவர் மணி மொழியாராயின், நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்ற எண்ணிக்கை மாறுபட்டுவிடுமே. மாணிக்கவாசகரை