பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அடியாரோடு இணைத்து விட்டால், அறுபத்துமூன்று அடியார்கள் அறுபத்துநான்காகி விடுவரே " என்பர்.

நாயன்மார்கள் அறுபத்துமூவர் என்பதை அறுதி யிட்டு உறுதியாகக் கூறமுடியாது. தனியடியார்கள் அறுபத்துமூவர்தாம் என்பதற்குத் தக்க சான்று திருத்தொண்டத்தொகையில் இல்லை. திருத்தொண் டத்தொகையில் இறுதித் திருப்பாட்டில் குறிப்பிடப் பட்ட சடையனர், இசை ஞானியார் ஆகிய இவர்களே யும் அடியார்களாகக் கொண்டு, நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்று கருதினர். இவ்விருவர்களேயும் அடியார் களாகக் குறிப்பிட நம்பியாரூரர் எண்ணவில்லை என்பது, அவரது திருவாக்கினல் பெறப்படுகிறது. இவ்விருவர்களை யும் அவர் அடியவர்களாகக்கருதி இருப்பார்ாயின், ஏனைய நாயன்மார்களுக்கெல்லாம் தாம் 'அடியேன் அடியேன்" என்று குறிப்பிட்டு வந்ததுபோல, இவர்களின் திருப் பெயர்கட்குப் பின்னர் அடியேன் ” என்று குறிப்பிட் டிருத்தல் வேண்டும். அங்ஙனம் குறிப்பிடாமல், தாம் இன்னருடைய திருமகனர் என்பதை விளக்க, சடை யன் இசைஞானி காதலன் திருகாவலூர்க்கோன் என்றே பாடியுள்ளார். இங்குக் கூறப்பட்ட கருத்துக் கள் உண்மை என்பதை,

மன்னியசீர் மறைநாவன் கின்ற ஆர்ப் பூசல்

வரிவளையார் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவளுய் உலகாண்ட செங்களுர்க் கடியேன்

திருலே கண்டத்தப் பாணனர்க் கடியேன் என்னவனும் அரனடியே அடைந்த சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவளும் ஆரூான் அடிமைகேட் டுவப்பார்

ஆரூரில் அம்மானுக் கன்பர் ஆவாரே.