பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

என்னும் திருத்தொண்டத் தொகையின் இறுதித் திரும் பாட்டினே கன்கு படித்து உணர்ந்த பின்பேனும் உறுதி கொள்வோமாக.

ஆகவே, நாயன்மார்கள் அறுபத்துமூவர் என் பதை கிலேநாட்டமுடியாது. நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்று நாம் எண்ண இடந்தந்தவர்கள், கம்பி ஆண்டார் கம்பிகளும், அவரை ஒட்டிப்பின் வந்த சைவ மரபுடை அன்பர்களும் ஆவார். ஆராய்ச்சி உலகில் அறுபான்மும்மை நாயன்மார்கள் என்று கூறி, நாயன் மார்களின் எண்ணிக்கையினை முடிவு கட்டிவிடுதல் வேண்டா.

இங்ங்ணம் எல்லாம் ஆய்ந்து கண்டதல்ை, பொய் யடிமை இல்லாத புலவர் மணிமொழியார்தாம் என்பதை அறிந்து, இதுவே சுந்தரர் கருத்து என்பதையும் உணர்ந்தோம். இனி, மணிமொழியார் பொய்யடிமை இல்லாத மெய்யடிமை உடையார் என்பதை ஒரு சிறிது உணர்வோமாக..

பொய்யடிமை இல்லாத புலவர் மணிமொழியார் என்பதை அவர் வரலாற்ருல் அறிதல்

வாதவூர் அடிகளார் பாண்டிமன்னன் பணத்தினைப் பெற்றுப் பரிகளைக் கொணரச் சென்றவர், பரமன் அருள் மேனிதாங்கித் திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் குருவடிவுடன் இருந்த நிலையினே க் கண்டதும்,

மின்னினும் நிலைமை இல்லா விழுப்பொருள் யாவும் வேண்டேன் உன்னடி அடைந்து கrயேன் உறுபவம் ஒழித்தல் வேண்டும் என்னை இன் றடிமை கொள் வாய் எம்முயிர்க் கிறைவா என்று முன்னுற வணங்கி நின் ருர் முகமெலாம் கண்ணிர் வாா.