பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

என்று தம்முறைப்பாட்டினேக் கூறித் தம் பொய்யடிமை இல்லா மெய்யடிமைத் திறனே வெளிப்படுத்தி நின்ற நிலை யினைக்கடவுள் மாமுனிவர்தாம்பாடிய திருவாதவூரர் புரா ணத்தில் பாடியுள்ளார். மணிமொழியாருடைய பொய் யடிமை இல்லா மெய்யடிமையினே மேலும் வலியுறுத்தும் முறையில், அன்னருக்கு வணக்க்ம் கூறும் வகையில், திருவிளையாடற்புராண ஆசிரியராம் பரஞ்சோதி முனிவர்,

எழுதரும் மறைகள் தேரு இறைவனை எல்லில் கங்குல் பொழுதது காலத் தென்றும் பூசனை விடாது,செய்து தொழுதகை தலைமீது ஏறத் துளும்புகண் ணிருள் மூழ்கி அழுதடி அடைந்த அன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்

என்று பாடிப் பரவசமுற்றதையும் எடுத்துக்காட்டாகக் காட்டலாம். எனவே, பொய்யடிமையில்லாத புலவர் மணிமொழியாரே யாவர். இதில் ஆசங்கை ஒன்றும் இல்லை. சேக்கிழார்மெருமானர் இக் கருத்தை நன்கு ஆய்ந்து முற்றத் தெளிந்து தாம் பாடியுள்ள பொய் யடிமை இல்லாத புலவர்களைப் பற்றிப் பாடவந்த இடத் தில் பாடிஅமைத்துள்ளார்.அதனை இனிக் காண்போமாக.

சேக்கிழார், பொய்யடிமை இல்லாத புலவரைச் சங்கப் புலவராகக் கருதிலர்

பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் சங்கப் புலவர் அல்லர், என்பதைச் சேக்கிழார் எப்படி விலக்கி யுள்ளார் என்பதை முதலில் நிலைநாட்டிப் பின்பு அவ் வரலாற்றில் குறிப்பிடப்பட்டவர் மணிமொழியாரே என்பதை அவர் வாக்கைக்கொண்டே கிறுவுவோமாக.

சேக்கிழார் பெருமானர் நாயன்மார்களின் வரலாற் றைப்பாடும் முறையே ஒரு தனிப்போக்கு. ஒவ்வொரு