பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் வரலாறுகளைக் குறிப்பிட்டுப் பாடி முடித்த பின்பு, தாம் கொண்டுள்ள அடியார் பற்றை வெளிப் படுத்த இதுவரை இந்த அடியார் வரலாற்றைக் குறிப் பிட்டேன். இனி, அன்னர் திருவடிகளை வணங்கிக் கொண்டு அடுத்த அடியாரைப் பற்றிக் கூறத்தொடங்கு கின்றேன்" என்று கூறிச்செல்வர். இந்த மரபுப்படி கூற்றுவணுயனர் புராணத்தைப் பாடிமுடித்தார். அடுத்த தாகக் கூறப்போவது பொய்யடிமை இல்லாத புலவர் புராணமாகும். அந்தச் சமயத்தில் தம் வழக்கப்படி,

காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல்சூழ்வையம் காத்தளித்தும் கோசங் க.கல முயல்களக்கைக் கூடற்ற ஞர்தம் கழல்வணங்கி ாாத மறைதங் சளித் காரை நடைநூல் பாவில்ாவின்றே த்தும் போக மருவிப் பொய்யடிமை இல்லாப் புலவர் செயல்புகல் வாம்.

என்று பாடியருளினர்.

இப்பாடலில் சங்கப்புலவர்களுள் ஒருவர் பெயரையும் குறித்திடாமல் பாடியுள்ளதையும், புலவர்கள் என்று குறிப்பிடாமல் மரியாதைப்பன்மை மரபுப்படி ஒருவர் என்ற குறிப்புத் தோன்ற புலவர் என்றே குறிப்பிட் டிருப்பதையும், மதுரையைப் பற்றியோ, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றியோ யாதொரு குறிப்பும் தோன்றப்பெருமல் செய்யுளினைப் பாடி அமைத்திருக் கும் முறைமையினையும் நாம் சிந்திக்கவேண்டாவா ? பொய்யடிமை இல்லாத புலவர் சங்கச் சான்ருேராயின், குன்றையாளியார் தமிழ் வளர்ந்த திருப்பதியாகிய மதுரையைப் பற்றி ஒரு மொழியேனும் கூறவேண்டாவா? மூர்த்திநாயனர் புராணத்தைப் பாடும் போதே பாண்டிய காட்டைப்பற்றியும், மதுரைமா நகரைப்பற்றியும், தமிழ்ச்சங்கத்தைப்பற்றியும்,