பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரர் மறந்தும் புறந்தொழாமாண்பினர் என் பது திருவாசகத்தில் ஐயந்திரிபறக் காணப்படுகின்றது. கொள்ளேன் புரந்தான் மாலயன் வாழ்வு; குடிகெடினும் ான்ளேன் நினதடி யாரொடல் லால்,ாா கம்புகினும் எள்ளேன் கிருவரு ளாலே இருக்கப் பெறின்,இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்ன அல் லாதெங்கள் உத்தமனே

எனற பாடலும்,

புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் சண்ணி

மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்தேம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே

என்ற பாடலும் மணிமொழியார் சிவனரிடத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றினை வெளிப்படுத்தி நிற்கின் றன. இதனைச் சேக்கிழார் பெருமாளுர் திருவாசகத்தில் நன்கு கண்டமையில்ைதான், பொய்யடிமை இல்லாத புலவர் புராணத்தில் அவரைப்பற்றிய குறிப்புக் கூறும் போது, இரண்டாம் செய்யுளில்,

ப்ெபிற்பமைத்த அாவாகும் புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டுநெறிக் தலைநின்ற பெற்றியினின் மெய்யடிமை உடைய சாம் பெரும்புலவர் மற்றவர்தம் பெருமையார் அறிந்துாைக்க வல்லார்கள்

என்று உளமாரப் போற்றிப் புகழ்கின்ருர். இங்ங்ன மிருக்கத் திருமாலேயும், அவரை ஒத்த தெய்வங்களையும் வணங்கி வழிபடுவோர் நிறைந்த சங்கப்புலவர்களே, புரிசடையார்தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவா * மெய்யடிமை யுடையாராம்" என்று எப்

ப்டிக் கூற இயலும் :

4