பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று வேண்டி, கம் மாணிக்கவாசகரைக் கொண்டு தம்மீது திருக்கோவையாரையும் பாடும்படி செய்து கொண்டனர். மணிமொழியாருடைய வாசகங்கள் மணி போன்றவை என்பதோடு இல்லாமல், தேன்போலச் சுவைக்கக் கூடிய் அளவுக்கு இருக்கின்றமையால், தாம் தனித்துப் பொழுது போக்க நேரிடும்போது, அப் பொழுதின வீணே கழிக்காமல் நூலைப்படித்துக் கவிச் சுவையினைத் துய்த்துக் காலத்தைப் போக்கவேண்டு மென்று கருதியே மணிமொழியார் நூலேயே விரும்பித் தம்மிட்ம் வைத்துக்கொண்டனர் என மைேண்மணியம் ஆசிரியர் திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய பாட்டை பும் நினைவு கொள்வோமானல், திருவாதவூரர் பொய் யடிமை இல்லாத புலவர் என்றும், பெரும்புலவர் என் றும் கூறப்படுவதன் உண்மை, மேலும் உறுதிப்படுவ தாகும். திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய பாட்டு, கடையூழி வருக்கணிமை கழிக்க அன்ருே அம்பலத்துள் உடையாருன் வாசகத்தில் ஒருபிாகி கருதினதே

என்பது.

மாணிக்கவாசகர்ை மாபெரும் புலவர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. அவர் பரந்த புலமை பெற் றிருந்தார் என்பது, அவரால் இயற்றப்பட்ட திருவாசகத் தாலும் திருக்கோவையாராலும் கன்கு புலகிைன்றது. அவர் தமக்கு முன் இருந்த இலக்கண இலக்கியங்களில் கன்கு பயிற்சி பெற்றிருந்தார்.

" வினவின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் ” என்பது தொல்காப்பிய நூற்பா. இப்பாவில் முழுமுதற் பரமனைக் குறிக்க முனேவன்' என்னும் சொல் பெய்யப்