பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிருக்கிறது. இச்சொல்லினை நமது வாதவூர் அடிகளார் தம் திருவாசகத்தில் பரமனைக் குறித்து எடுத்து ஆண்டுள்ளார்கள். ------

முனைவனே முறையோகான் ஆனவாறு முடிவறியேன்முதலங்கம் ஆயினனே என்றும்,

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே என்றும் சுட்டறுத்தல் என்ற இடத்து ஆளப்பட்டிருப் பதைக் காண்க.

ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியத்தின் கண்,

உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர் நீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று என்ற சூத்திரம் மிளர்வதைக் காணலாம். இச்சூத்திரத் தினே அப்படியே எடுத்துக்கொண்டு, மணிமொழியார் தமது திருக்கோவையாரில்,

தாயிற் சிறந்தன்று நாள்தைt லாருக்கத் தாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றிங் கோயிற் சிறந்து சிற் றம்பலத் தாடும்எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதி.நுதலே என்று பாடி அமைத்திருப்பதை அறிதல் வேண்டும்.

அகநானூற்றில், கோழிலை வாழைக் கோள்மிகு பெருங்குலே ஊழுறு தீங்கனி உண்னுகர்த் தடுத்த சாால் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்