பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

లేు

அறியா துண்ட கடுவன் அயலது கறிவளர் சாக்தம் எறல் செல்லாது கறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் தின்மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் நாட

என்ற பாடல் வருகின்றது.

இப்பாடல் பொருளை நன்கு உளத்தில் கொண்டே மணிமொழியார்,

மையார் கதலிவனத்து வருக்கைப் பழம்விழதேன் எய்யா தயின்றிள மத்திகள் சோரும் இரும் சிலம்பா மெய்யா அரியதென் அம்பலத் தான்மகியூர் கொள்வெற்பின் மொய்யார் வளர்இள வேங்கைபொன் மாலையின் முன்னினவே

என்று பாடியருளினர்.

கற்ருர் ஏத்தும் கலித்தொகையில்,

பலவுறும் நறும்சாந்தம் படுபவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலக்கவைதாம் என்செயும் கினையும்கால் நம்மகள் நுமக்கும்.ஆங் கனையளே சீர்கெழு. வெண் முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செயும் தேருங்கால் நம்மகள் நமக்கும்.ஆங் கனையளே எழ்புணர் இன்னிசை மு.ால்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செயும் குழுங்கால் நம்மகள் நமக்கும்.ஆங் கனையளே

என்னும் சுவை மிகுந்த பாடல்கள் காணப்படுகின்றன. இச் சுவை மிகுந்த கவிகளில் மூழ்கிய நம் திருவாதவூரர் தமது நூலாகிய திருக்கோவையாரின்கண் இம்மூன்று தாழிசைகளின் சொல்லும் பொருளும் தோய்ந்திருக்கும் வண்ணம்,