பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58.

வேதனை படுவதுபோல" என்பதாகும். ஆனால், இருமுன்ை களில் நெருப்பு இருந்தால் நடுப்புக்கம் வழிகண்டு வெளி வந்து தன் வேதனையைப் போக்கிக்கொள்ள எமம்புக்கு வாய்ப்புண்டு. ஆகவே, அப்பழமொழி நெருப்பிடையே அகப்பட்ட எறும்பின் வேதனேயை முற்றமுடிய எடுத்து உரைப்பதாக மாட்டாது. இந்தக் கருத்தை நன்கு சிந்தித்த மணிமொழியார், அப்பழமொழியைச் சிறிது மாற்றி, ' இருதலைக்கொள்ளியின் உள் எறும்பு ஒத்து" என்று பாடித் தமது திருவாசகத்தில் காட்டியிருப்பது மணிமொழியாரின் பேரறிவுத் திறனுக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக் கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்காசே பொருதலே மூ இலே வேல்வலன் எந்திப் பொலிபவனே

என்பதே அப்பழமொழி அமைந்த பாடல்

உலகில் பல் பொருள்கள் காணப்படுகின்றன. அப் பொருள்கள் தாமாகத் தோன்றுவன அல்ல. அவை தோன்றற்கு ஒரு சக்தி வேண்டியதாக உள்ளது. அச் சக்தியே இறை எனப்படும். இந்த உண்மையைத்தான் " அவனே அன்றி ஓர் அணுவும் அசையாது” என்று வழங்கப்பெற்றுவரும் பழமொழி விளக்கிக்கொண்டிருக் கிறது. ஆகவே, உலகுக்கு முதற் காரணன் இறைவன் என்பது பெறப்படுகிறது. இதனை வள்ளுவரும்,

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முற்றே உலகு ' என்ற குறளாலும் தெளிவுபடுத்தியுள்ளார். இக் குறளின் தெளி பொருளை காம் எங்கே உணராமல்