பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேர்கின்ருேமோஎன்ற எண்ணத்தினராய்ப் பரிமேலழகர் விழிப்புடன் " காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே உலகு என உலகின்மேல் வைத்துக் கூறினர் : கூறினரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க' என்று உரை வகுத்துச் சென்றனர்.

இவ்வாறு வள்ளுவர் உள்ளம் அறிந்து உரை கண்டார் அன்ருே பரிமேலழகர் ? இப்பரிமேலழகருக்கும் பல்லாண்டு முன்னிருந்த மணிமொழியார் அக்குறட் பாவின் ஆழ்ந்த கருத்தை அறிந்து, தாம் இறைவனே விரும்பியதற்குக் காரணம் உலகமே சான்ருகும் என்று அறிவித்தருளினர். அங்ங்னம் அறிவித்த பாடல்,

கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சில மேதும் அறிந்தி லாதனன் சிந்தை வைத்த சிகாமணி ஒால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடும் கால மேஉனை ஒதt வந்து காட்டி ய்ைகழுக் குன்றிலே

என்டது.

உலகம் என்னும் சொல்லுக்குரிய பரியாய மொழி களில் ஞாலம் என்பதும் ஒன்று. உலகத்திற்கு ஞாலம் என்ற பெயர் கொடுத்தமைக்குக் காரணம் உலகம் வெளியில் தொங்கிக்கொண்டிருப்பதனால் என்க. ஞாலு தல், தொங்குதல். இவ்வாறு உலகங்கள் வெட்ட வெளியில் தொங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் இறைவன து கட்டளைக் கிணங்கியே ஆகும். ' இங்ங்னம் யாவற்றையும் கிலேகிறுத்தவல்ல பேராற்றல், இறைவா, உன்னிடத்தில் இருப்பதனால்தான் உன்னை நச்சினேன்" என்று கூறித் தமக்குள்ள ககோளப் புலமையும் காட்டி