பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் இணைத்துப் பாடியுள்ளார். உடைய்ாள் உன்றன் நடுவிருக்கும்." என்பது வகரத்தையும், உடிை யாள் நடுவுள் நீ இருத்தி ' என்பது சிக்ரத்தையும், அடியேன் நடுவுள் " என்பது யகர்த்தையும், அடியார் கடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ” என்பதஞ்ல், மறைப்பையும், மலத்தையும் ஒழித்து அருளைப் புரியாய் என்று கூறி நகர, மகர எழுத்துக்களின் நினைப்பையும் நமக்கு அறிவித்து நிற்பதைக் கிாணலாம். முதலில் இம் மகா மந்திரத்தைத் நாமே உச்சரிக்க மேற்கொள்ளாது, குருமுகமாக உபதேசம் பெற்றுப் பின்னர் உச்சரிக்க வேண்டும் என்பதற்காகச் சிவாயநம என்று அம் மந்திரத்தையே வெளிப்படையாக அமைத்துப் பாடலைப் பாடாது,சிவாயநம எனும் எழுத்துக்களைக் குறிக்கக்கூடிய கருத்துடைத் தொடர்களைப் பொருத்திக் காட்டினர் என்க. எந்த அளவுக்கு இவர் பேரறிவும் பேரருளும் பெற்றிருந்தால், இவ்வாறு பாடமுடியும் என்பதை நாம் சிறிது சிந்தித்தாலே மணிமொழியாரது புலமைப் பெருக்கு நன்கு புலகுைம்.

திருக்கோவையாரின் முதல் பாடல்,

திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் சர்சில்லச் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காக்கள்கொண்டோங்குதெய்வ மருவளர் மாலையோர் வல்லியின் ஒல்கி அனாடைவாய்க் துருவளர் காமன் தன் வென்றிக் கொடிபோன் ருெளிர்கின்றதே

என்பது. இப்பாடலில் குறிப்பிடப்பட்ட தாமரை, காவி, குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய ஐவகை மலர்கள் முறையே, மருதம், நெய்தல், 'முல்லே, பாலே, குறிஞ்சி ஆகிய ஐவகை நிலங்களில் தோன்றுமலர்கள் ஆதலின், அவற்றை ஒருங்கே ஈண்டுக் கூறக்காரணம், ஐவகை