பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலங்களிலும் சென்று துய்க்கக்கூடிய இன்பத்தைத் தில்லைக்கண் வாழ்வார் ஆண்டிருந்துகொண்டே துய்க்க வல்லவர் என்பதைக் காட்டற்கு என்றும், தாமரை, திருவளர் என்றும், காவிகள் சீர்வளர் என்றும், பூங்குமிழ் குருவளர் என்றும், காந்தள் பைங்காந்தள் என்றும், அடைகொடுத்துப் பாடி, கோங்கு மலர்க்கு எந்தவித மான அடையும் கொடுத்து மணிமொழியார் பாடாமைக் குரிய காரணம், தாமாை முகத்திற்கும், காவிகள் கண் க்ளுக்கும், குமிழ் மூக்கிற்கும், கரந்தள் கைகளுக்கும் உவமைப் பொருளாக இருப்பதுபோல், கோங்கு என்பது முலைக்கு உவமையாக இருத்தலின், இயற்கையிலேயே அழுகுபெற்ற அக்கொங்கையின் ஏற்றத்தை விளக்கி நிற்கவே அடைகொடாது பேசினர் என்றும், அங்கனம் அடைகொடுப்பின் ஏனைய உறுப்புக்களைப்போல இத் தனங்களும் ஓர் உறுப்புத்தானே என்று கருதப்பட்டு அவற்றின் மேன்மை புலப்படாமல் போகும் என்று கருதியே அடைகொடுத்துப் பாடிற்றிலர் என்றும் பொருள் விளக்கம் காட்டிச்சென்றனர் பேராசிரியர். இவ்வாறே திருக்கோவையாரின் ஈற்றுச் செய்யுளாகிய

காரணி கற்பகக் கற்றவர் நற் றணை பாணர்ஒக்கல் ாேணி சிந்தா மணி அணி கில்லைச் சிவனடிக்குத் தாாணி கொன்தையன் தக்கோர் தஞ்சம் விதிவிதிசேர் ஊருணி யுற்றவாள் கூான்மற் றியாவர்க்கும் ஊதியமே

என்னும் பாடற்குப் பொருள் எழுதுங்கால், ஊரன வேண்டாமைக் கொடுத்தலின் காரோடொக்கும் என் றும், வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகிதோடு ஒக்கும் என்றும், நுண்ணிய கல்வியனகலின், கிறவர்க்கு