பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல உசாத்துணை என்றும், இசையுணர்வர்னும், கெழு தகைமையானும் பாணர்க்கு அவர் சுற்றத்தோடொக்கும் என்றும், கெனத்தது கொடுத்தலின் சீரையுடைய நல்ல சிந்தாமணியோடொக்கும் என்றும், அழகிய தில்லைச் சிவனடிக்குத் தாராகி அவல்ை அணியப்படும் கொன் றைப் பூவின் தன்மையுடையவன் என்றும், சான்ருேர் தமக்குத் தொலையாத நிதியாய் இருத்தலின் சங்க நிதி யோடு ஒக்கும் என்றும், கட்டார்க்கும் பகைவர்க்கும் தப்பாது பயன்கொடுத்தலின் விதியோடொக்கும் என் றும், சுற்றத்தார்க்கு அவர் வேண்டிய செய்ய இருத் தலின் அணித்தாகிய ஊருணியோடு ஒக்கும் என்றும், அதல்ை வரைவின்றி எல்லார்க்கும் இவன் பெரும் பயன் என்றும், நன்கு விளக்கிச் சென்ருர் உரையாசிரியராம் பேராசிரியர்.

இங்ங்னமெல்லாம் உரை கூறற்குக் காரணம் மணிமொழியார் மொழிகளில் பொருள் செறிவு இருத் தலினல் அன்ருே ? அவரது கவிகள் பொருள் செறி வுடையன என்பதை நம்பியாண்டார் நம்பிகள்,

வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண் டில்லைமன்னைத் திருவாத ஆர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயும் மற். றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

என்று பாடி அறிவித்தார்.

கற்பனைக்கு ஊற்ரும் துறைமங்கலம் சிவப்பிரகாச

சுவாமிகள் " பாவெனப்படுவது உன்பாட்டு ' என்று

மணிமொழியாரை கோக்கி வியந்து போற்றியுள்ளார்.