பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகமும் பெரிய புராணமும்

சேக்கிழார் தாம் திருவாசகத்தினை நன்கு ஒதி உணர்ந்த நிலையினைத் தம் நூலில் பல்வேறு இடங்களில் காட்டியுள்ளார். எங்கனம் காட்டியுள்ளார் என்பதை இனி எடுத்துக் காட்டுவோமாக.

சேக்கிழார் பெருமானர் முன்னேர் மொழி பொருளே அன்றி, அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவார் என்னும் மொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாவார் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும்.

சேவையர் காவலர் திருவாசகத்தின் அருஞ்சொற் ருெடர்களே எம்முறையில் எங்கெங்கு எடுத்து ஆண்டுள் ளார் என்பதைக் காணின் உண்மை புலப்படும்.

சண்டேசுர நாயனர் இறை அன்பில் ஈடும் எடுப் பும் அற்ற நிலையில் திளைத்திருந்தவர். 'அதன் காரண ம்ாகத் தாம் பூசை புரிந்து கொண்டிருக்கையில் இறை வருக்குரிய முழுக்கின் பொருட்டுக் குடங்கள் கிறையப் பாலை நிரப்பி வைத்திருந்தபோது, அவற்றைச் சண்டே சுரரின் தங்தையான எச்சதத்தன் என்பான் தன் காலால் உதைத்து அக்குடங்களில் இருந்த பாலினைக் கீழே வீணே போகுமாறு செய்தான். இந்த அளவிலும் நில்லாமல், சண்டேசுரர் பூசைபுரிந்த சிவலிங்கப்பெரு மானையும் தன் காலால் உதைத்துள்ளான் என்பது சுந்தரர் திருப்பாட்டு கன்கு உணர்த்துகிறது. அதாவது,

எத கன்னிலம் ஈாறு வேலி ஏயர்கோன் உற்ற

இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களில் பால்கறத் தாட்டக் கோல வெண்மணல்

சிவன்தன்மேல் சென்ற - -