பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ததை தாளற எறிந்தசண் டிக்குன் சடைமி சைமலர்

அருள்செயக் கண்டு பூத ஆளிகின் பொன்னடி அடைந்தேன் பூம்பொழில் கிருப்

புன்சுடர் உளானே

என்பதாம்.

உதைத்தது பாவம் அன்ருே? அதுவும் சிவ பூசையில் தேக்கித் திளைக்கும் சண்டேசுரரைத் தனக்குத் திருமகன ராக வாய்க்கும் பேறுபெற்ற தந்தை இப்படிச் செய்ய லாமா? இதல்ைதான் சேக்கிழார் பெருமான் இவ்வெச்ச தத்தன் இயல்பை நன்கு அறிந்து இவனைப்பற்றிக் கூறத் தொடங்குங் காலத்து,

அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அாவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவாம் எச்சதத்தன் உளளுைன்

என்று சுட்டி அருளினர். ஈண்டுச் சேக்கிழார் பெருமா ரிைன் உவமைப் பொருத்தத்தையும் நன்கு சிந்தித்துப் பார்த்த பின்பே மேலே செல்லுதல் வேண்டும். இவ் வெச்சதத்தனே அரவினுக்கு உவ்மை கூறி, அவ்வரவு நல்ல மாணிக்கத்தைத் தருவதுபோல இவ்வெச்சதத்த னும் அருமையினும் அருமையான மாணிக்கமாகிய சண்டேசுர நாயனரைச் சைவ உலகிற்குத் தந்தான் என்ருலும், புயங்கம் அருமை மணியினைக் கொடுத்தா லும் கஞ்சினையும் நல்கவல்லது போலவே, இவ்வெச்ச தத்தன் நஞ்சுபோன்ற கொடுமையினைச் செய்தவன் (அதாவது சிவனையும் சிவபூசைக்குரிய பாற்குடங்களை யும் தன் காலால் இடறினவன்) என்பதை உட் கொண்டே இவ்வாறு அவன் இயல்பை எடுத்துக் காட்டினர் புலவர். அத்தகையவன் தமக்குத் தந்தை முறையினனே ஆயினும், செய்த செயல் அடாத செயல்

5