பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ஆதலின், எந்தக் கால் பாற்குடங்களையும் இறைவனையும் உதைத்துத் தள்ளினதோ அந்தக் காலே வெட்டி வீழ்த் தினர் நாயனர். தீமை செய்தவர் சிறந்தவர், பிறந்த உற்ருர், தாயார், தந்தையராக இருப்பினும் அவர்களைத் தண்டித்தல் முறை என்பது நீதி நூல் தருமம் என்பதை விபீடணன் கும்பகர்ணனுக்குக் கூறும்போது கூறிய தாகக் கம்பரும்,

இயேவை செய்வ ராகில் சிறந்தவர் பிறந்த உற்ருள் தாயவை தந்தை மார்என்று உணர்வரோ தருமம் பார்ப்போர்

என்று செப்பியுள்ளார். ஆகவே, சண்டேசுரர் செய்த செயல் தகாத செயல் அன்று. தக்க செயலே. தக்க செயலாக இருந்திலதேல், இறைவனர் தாதை தாள் எறிந்த தண்டியாரைத் தம் மகனராக ஏற்றுக் கொள் வரோ ? ஏற்றுக்கொண்டு தம் திருவாக்கால்,

தொடுத்த இதழி குழ்சடையார்

துணைத்தாள் நிழல்கீழ் விழுந்தவரை எடுத்த கோக்கி, " கம்பொருட்டால்

-ஈன்ற தாதை விழ எறிந்தாய் அடுத்த தாகை இனி உனக்கு

. நாம் 'என்று அருள்செய்து அணைத்தருளி மடுத்த கருணை யால் சடவி

உச்சி மோந்து மகிழ்ந்தருள.

என்று கூறியதோடும் தழுவியதோடும் நில்லாமல், மேலும்,

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு

அதிபன் ஆக்கி அனைத்திம்காம் உண்ட கலமும் உடுப்பனவும்

குடு வனவும் உனக்காகச்