பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

எந்த நூலிலும் காணப்படாத தொன்று. திருவாசக்த் தில் மட்டும் வந்துள்ள தெர்டராகும். அத்தகைய

அருந்தொடரைச் சேக்கிழார் தம் பெருநூலில் எடுத்துப் பேசிக்கொள்வதற்கு வாய்ப்புத்தந்தது திருவாசகமே அன்ருே ?

மேலும், மாணிக்கவாசகப் பெருமாருைம், இறைவர் தம் அடியார் செய்வனவற்றைத் தவமாக்கும் இயல் பினர் என்பதைப் பொதுப்படக் காட்டி அதற்கு எடுத் துக்காட்டுச் சண்டேசுர நாயனர்தாம் என்பதை உணர்த்துவார்போல, புத்தன் முதலாய் என்ற பர்ட் டிற்கு அடுத்ததாக,

தீதில்லை மாணி சிவகருமம் சிதைத் சானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாள் இாண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோளுேக்கம்

என்று சண்டேசுரரது சீரிய செயலைக் குறித்துப் பாடி யுள்ளார். இந்தக் குறிப்பின் நுண்பொருளை யுணர்ந்தே சேக்கிழார் பெருமானர் சண்டேசுரர் புராணம்பாடுங்கர்ல் மணிமொழியார் குறிப்பிட்ட செய்தனவே தவ மாக்கும்' என்னும் தொடரையே செய்தனவே தவ. மாம் என்று கூறி அமைத்துக் கொண்டனர். • ,

திருவாதவூரர் இறைவரை உள்ளங்குளிர விளிக்கும் பகுதிகள் ஆண்டவன் பெருமையினே அறிவிக்கும் கிலே யில் காணப்படும். அவற்றிற்குரிய இடங்கள் பலவாக இருந்தாலும், ஓர் இடத்தில் சிவபெருமானே விளித்துத் தமக்கு இறைவர் அருள் புரிந்த பேர்அருள் திறத்தைக் குறிப்பிடும்போது, - \, :