பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

குறைவிலா கிறைவே கோதிலா அழதே !

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே !

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என்

மனத்திடை மன்னிய மன்னே!

சிறைபெரு நீர்போல் சிங்தை வாய்ப் பாயும்

இருப்பெருக் துறையுறை சிவனே !

இறைவ்னே எேன் உடல் இடம் கொண்டாய்

இனிஉன்னை என்இரக் கேனே

என்று பாடிப் பரவசமுற்றுள்ளார்.

குன்றைக் கோமகளுர் மணிமொழியார் மணித் தொடராகிய கோதிலா அமுதே' என்னும் சீரிய தொடரை எங்கு அமைத்துப் பெருமை பெறலாம் என்று நன்கு சிந்தித்தனர். இறைவர் பெயரையோ, அவரைக் குறிக்கும் தொடரையோ பெரியபுராணத்தில் அமைத்துப் பேசாத இடமே இல்லை. அந்நூல் கண்ணு தல்பெருமானரது கருணைத்திறனும், அடியவர்களின் அன்பின்மேம்பாடும் தோன்றப்பாடப்பட்டநூலன்ருே? அத்தகைய சீரியநூலில் இறைவுரை அறிவிக்கும் தொடர் கட்கு இடம் இல்லாமல்போகுமா? போகாதன்ருே ? என்ருலும், ஆன்ருேர் வாக்கினேத் தக்க இடத்தில் வைத் துத் தானே அமைத்துப் போற்றவேண்டும்? ஆன்ருேர் மொழிகளையும் தொடர்களையும் தக்க இடத்தில் வைத் துப் போற்றக்கூடியவர் என்பதற்குச் சான்று சேக்கி ழார் பெருமானுர் முழுமுதல் பரமன் மொழியான ' உலகெலாம்" என்னும் தொடரைத் தம் நூலில் மூன் றிடத்து வைத்த முறைமையே போதியதன்ருே ? அம் மூன்று இடங்கள் தம் நூலின் முதல் செய்யுளாகிய,

உலகெ லாம்.உணர்க் கோதற் கரியவன்

சிலவு லாவிய நீர்மலி வேணியன்