பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகில் சோதியன் அம்பலக் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்ற இடத்தில் முதலிலும், தோணிபுரத் தோன்றலாம் ஆளுடைய பிள்ளையார் இறைவர் தமக்கு அளித்த முத் துச்சிவிகையில் இவரும் சமயம்,தம் நூலில் இடைப்பகுதி யில் வரும் கட்டமாக அமைதலில் அவ்விடத்தும் அவ் வுலகெலாம் என்னும் மெய்ம்மொழியின,

சோதி முத்தின்.சிவிகை சூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணிற்ருெளி போற்றிகின்று ஆகி யாாரு ளாதலின் அஞ்செழுத்து ஒதி ஏறினர் உய்ய உலகெலாம்

என்று இயைத்தும், தம் நூலின் இறுதியிலும், அவ் விறைவரின் அமுத வாக்கின,

என்றும் இன்பம் பெருகும் இயல்பினேடு ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று எாாடி யார் அவர் வான் புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்

என்றும் பாடி அமைத்துள்ளார் அல்லவோ ? அத்தகைய

அறிவு மதுகை அமையப் பெற்றவர் கோதிலா அமுதே என்று திருவாசகத்தில் காணப்படும் தொடரை ஆளு

டைய நம்பிகளது வரலாற்றுப் பகுதியில், அங் கம்பிகள்

இறைவரால் மணப்பந்தலில் தடுத்தாட் கொள்ளப்பட்டு, அவர் பின்னர்ச் சென்று திருவெண்ணெய் நல்லூர்த்

திருவருட்டுறைத் திருத்தளியில் புகுந்தபோது இறைவர் அம்மை அப்பராய்க் காட்சி அளித்து, நம்பியாரூரரை நோக்கி,