பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாக்கேன் என்னும் இரு எதிர்காலத்தன்மை ஒருமை வினைமுற்றுக்களும் ப், வ் என்னும் எதிர்கால இடை நிலைகளைப் பெற்று அமையாமல் க் என்னும் அரிதாக வரப்பெறும் எதிர்கால இடைநிலையினேப் பெற்று வங் துள்ளமையினையும் அறிஞர்கள் சிந்திப்பார்களாக. இவ் வாருன பொருத்தங்கள் இவ்விருபாடல்களிலும் பொருந்தி இருப்பதனால்தான்,

கோதில அமுதே அருள்பெருகு கோலமே'இமை

யோர்தொழு கோவே

பாதி மாதொரு கூறுடை யானே பசுபதீபா

மாபா மேட்டீ

நீதி லாமலே யேதிரு அருள் சேர் சேவகாதிரு

வாவடு துறையுள்"

ஆதி யேஎன அஞ்சல்என் றருளாய் ஆர்.எனக்குறவு

அமரர்கள் ஏறே

என்ற சுந்தரர் திருப்பாட்டினைத் தழுவிச் சேக்கிழார் தம் பாட்டினைப் பாடியுள்ளார் என்று கருதுதற்கு இல்லை. மணிமொழியார் மொழிகளை உட்கொண்டே பாடியருளி னர் என்றே கருதவேண்டி இருக்கிறது. இவ்வெடுத்துக் காட்டுச் சேக்கிழார் பெருமானர் மணிமொழியாரது சொல்லிலும் தொடரிலும் ஈடுபட்டுள்ள இயல்பின் மாட்சியினைக் காட்டுகிறது.

தேனுந்து ' என்னும் தொடர், திருவாசகமாம் பெருநூலில் காணப்பெறும் ஒர் அரிய தொடர். அதனை வாதவூர் அடிகளார் திருக்கோத்தும்பி என்னும் தலைப்பின்கீழ் பாடியுள்ள பாடல்களின் ஒன்றில், இறை வர் தம்மை ஆட்கொண்ட பெருங்கருனேயினைப் பாராட் டிப் பேசுகையில்,