பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்னும்என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானும் கிசைகளும் மாக்கடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்று தாய் கோத்தும்பீ

என்று உளங்கனிந்து உரைத்தருளினர்.

இவ்வருமைத் திருப்பாட்டில் இறைவன் திருவடி தேனுந்து என்றும் அடைகொடுத்துச் சிறப்பித்துப் பாடியிருப்பதைப் படிக்கும்தோறும் நம் நாவிலும் தேன் ஊறுகிறதல்லவா ? திருவாசகமே தேன்தானே! அதல்ை

தொல்லை இரும்பிறவி குழும் தளை நீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே-எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னும் தேன்.

என்ற அருமைப் பாடலும் எழக் காரணமாயிறறு ? இந்தத் தேனுந்து என்னும் தேன்போல் இனிக்கும் தொடரினைச் சேக்கிழார் பெருமானுர், எத்தகைய சந்தர்ப்பத்தில் எடுத்து ஆண்டுள்ளார் என்பதைச் சிக்திக்கும்போதுதான் அவரது பேர் அறிவுத்திறன் பெரிதும் விளக்கமாகிறது.

ஆளுடைய அரசு முன்னே விதிப்பயனல் சிலகாலம் சைவசமயம் தணங்து சமண்சமயம் புகுந்து வாழ நேர்ந்தது என்ருலும், திலகவதியார் துணையினல் மீண் டும் சைவசமயம் புக்கு இன்புற வாய்ப்புக் கிடைத்தது. இதற்கிடையில் நம் சமயத்தில் புகுந்து இருந்தவர், மீண் டும் தம் பழைய சைவசமயத்தினைச் சார்ந்துவிட்டனரே! அத்தகையவரை உயிருடன் வைப்பின், நம் சமயத் திற்கே இங்கு உண்டாகும் ' என்று கருதிய சமணர்கள்