பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுதழுது அரனடிக்கே அன்பு பூண்டவர் ஆளுடைய அடிகளார் என்பது அகச் சான்ருலும் புறச் சான்ருலும் புலகுைம் ஒர் உண்மையாகும். அழுதடி அடைந்த அன்பன் அடியவர்க்கடிமை செய். வாம்' என்ற பரஞ்சோதியார் கூற்ருலும், பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கிக் கரைந்துகரைத் திருகண்ணிர் மழைவாாத்

துரியநிலை கடந்து போந்து திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்

வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து இருந்தருளும் பெருங்கீர்த்தி வாதஆர்

அடிகளடி இணைகள் போற்றி என்ற சிவஞான முனிவர் மொழியாலும்,

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன் பேர்.அருள் பெற்றும் பெருளின் அழுங்கி நெஞ்சம்நெக் குருசி நிற்பை நீயே

என்னும் துறைமங்கலம், சிவப்பிரகாச சுவாமிகளின் மொழியாலும், புறச்சான்றுகள் உள்ளமை கொண்டு நிறுவிக் காட்டலாம். அகச்சான்ருக அனேக சான்று களேத் திருவாசகத்தினின்றும் காட்டலாம். அழுதால் தான் அரன் அருளைப் பெற முடியும் என்ற முடிந்த முடிபுடையவர் திருவாதவூரர் என்பதை அவரது வாக் காகிய,

யானே பொய்என் நெஞ்சம் பொய்என் அன்பும்பொய் ஆனல் வினையேன் அழதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே கித் கிக்கும் ஆனே அருளாய் அடியேன் உனைவக் துறுமாறே