பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுதாய பாவசத்தின் முகிழ்ச்சமயிர்க் கால்மூழ்க விழுதாாை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினர் என்று பாடி அமைத்தார்.

இப் பெரிய புரர்ணப் பாடல் மணிமொழியாரது விதிர் விதிர்த்து என்னும் தொடரை மட்டுமா கொண் டுள்ளது ? ' மெய்தான் அரும்பி " என்னும் பாட்டின் சாரத்தினை அன்ருே அப்படியே தன்னகத்தே கொண் டுள்ளது ? முகிழ்த்த மயிர்க்கால் ' என்பது ' மெய் தான் அரும்பி " என்ற தொடரின் கருத்தன்ருே ? 'விழுதாரை கண்பொழிய' என்னும் தொடர் கண்ணிர் ததும்பி' என்னும் தொடர்ப் பொருளன்ருே ?

அடுத்தபடியாக அன்புருவான அருண்மொழித் தேவர், அரனர் அன்பரான வாதவூர் பெருமானர் வாக் கில் அமைந்த கருத்துக்களை எம்முறையில் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார் என்பதையும் சிறிது சிந்திப்போமாக. சேக்கிழார் பெருமாளுர் முன்னேர் மொழிபொருளை வெகு நுட்பமாகக் கையாளுவதில் பெருஞ் சமர்த்தர் என்று கூறினேம் அன்ருே ? இதற்கு ஒர் எடுத்துக் காட் டினை ஈண்டு எடுத்து இயம்பின் அது இன்பம் தருவதாகும். மானக்கஞ்சாற நாயனர் புராணத்தில், நாயன ருடைய வாழ்க்கைத் துணைவியார் இயல்பினைச் சுருக்க மாகச் சொல்ல வருகிருர் சேக்கிழார். அப்படிச் சொல்ல வந்த சமயம் அவ்வம்மையார் பிள்ளைப் பேற்றை எய்திய அமையம். அதனை அழகுறத் தெரிவிக்க எண்ணியவர், குழைக்கலையும் வடிகாகில் கூத்தனர் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்குழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்கும்நெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார் என்று தெரிவித்தனர். -