பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாடலில் மானக்கஞ்சாம நாயனரின் வாழ்க் கைத் துணைவியார் இயல்பினைச் சுருங்கிய அளவில் தெரிவிக்கும் தொடர் மழைக்குதவும் பேருங்கற்பு என் பது. ஈண்டுக் குறிக்கப்பட்ட மழைக்குதவும் பெருங் கற்பு என்பதை எந்நூல் கருத்தைத் தழுவி எழுதியுள் ளார் சேக்கிழார் எனச் சிறிது சிக்தித்துப் பார்க்குங் காலத்துப் பொய்யில் புலவராம் திருவள்ளுவ நாயனர் திருவாய்மலர்ந்துள்ள திருக்குறளில் காணப்படும் வாழ்க் கைத் துணைவி என்னும் அதிகாரத்தில் காணப்படும்,

" தெய்வம் தெழாஅள் கொழுநன் தொழுதெழுவிாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற குறள் பொருள் முழுமையையும் தழுவிப் பாடி யுள்ளார் என்பது தெரியவருகின்றதன்ருே ? எனவே, சேவையர்காவலர் தம் சீரிய நூலில் மணிமொழியார் வாக்கின் கருத் துக்களையும் இம்முறையில்தான் நட்ப" மாக எடுத்தாண்டுள்ளார். அவ்விடங்களை இனிக் காண்போமாக.

திருவாசகத்தில் பிடித்த பத்தில், uనిజr} துட்டும் காயினும் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் கிரிந்த

செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ கினியே

என்ற வாசகத்தில் இறைவனது இன்கருணைத் திறத்தை வியந்து பேசவிரும்பிய மணிமொழியார், தாயினும் அன்