பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உலகம் இந் நூலே வரவேற்று கண்பருக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் என ம்ேபுகிறேன்.

29–6–256.

gewoon-au-vamaan

கியூ டெல்லி, ராவ்சாகிப் ஜி. வன்மீககாதப் பிள்ளை, பி. ஏ. அவர்கள் எழுதியது.

தாங்கள் அன்புடன் அனுப்பிவைத்த பொய்யடிமை இல்லாத புலவர் யார் ” என்ற ஆராய்ச்சி நூலேப் பெற்றுப் படித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். திருவாசகமும் பெரியபுராணமும் என்ற பகுதியில் பொதுவாகவும் 88-89ஆம் பக்கங்களில் சிறப்பாகவும் எப்படிச் சேக்கிழார் பெரு மான் மாணிக்கவாசகரின் பதங்களேயோ அல்லது அவை தொனிக்கும் பதங்களேயோ தம் பாடல்களில் அமைத்துள் ளார் என்பதை அரிது சுட்டிக்காட்டி இருப்பதிலிருந்து சேக்கிழார் பெருமான் திருவாசகத்தைச் செவ்வையாகப் பயின்றிருக்கின் ருர் என்று ஐயம் கிறைந்தவர் மனத்தையும் தெளிவிக்கும். அது மட்டும் அன்றிப் பொய்யடிமை இல்லாத புலவர் புராணம் கொண்டுள்ள இரண்டே செய்யுட்களில் சொல்லுக்குச் சொல் மாணிக்கவாசகரையே சுட்டிப் பறைசாற்றுவதாகக் கொள்ளலாம் என்று காட்டி யுள்ள திறமையை வியந்து பாராட்டுகின்றேன்.

தாங்கள் காட்டியுள்ள சான்றுகளே மறுப்பது எளி தன்று. மெய்யை மறுப்பது எப்படி முடியும்? இரண்டே பாட்டுகளாயினும் ஒவ்வொரு சொல்லும் எவ்வெவ்வெழுத் தால் அமைந்தாலும் மணிவாசகர் என்றே ஒலிக்கின்றன என்று கிலேகாட்டிய த்ங்கள் மெய்யறிவைப் போற்று கின்றேன்.

18–9—'57.