பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

படும், 'வைச்சு வாங்குவாய்" என்னும் தொடர்ப் பொருளை மட்டும் நம் கினேவில் கொண்டு, இத்தொடர்ப் பொருள் கருத்தினைச் சேக்கிழார் பெருமானர் எம்முறை யில் தம் நூலில் கூறுகிருர் என்பதை மட்டும் கவனிப் போமாக.

திருநீலகண்ட காயனர், அரனர் அன்பர்கட்குத் திருவோடு அளிக்கும் திருத்தொண்டு செய்து வந்தவர். இத்தொண்டர் தம்பால் கொண்டுள்ள அன்பின் முதிர் வையும், தாம் கூறிய ஆணேயின் வண்ணம் ஒழுகிய கிலே யினையும் உலகிற்குக் காட்டவிழைந்த இறைவனர் அடியவர் வேடம் பூண்டு நாயனர் இல்லம் போந்து, தம்மாட்டிருந்த திருவோட்டினே அவர்பால் தந்து, தாம் வந்து மீண்டும் கேட்கும் காலத் தத் தருமாறு பணித்துச் சென்ருர். நாயனரும் அடியார் ஆணைப்படி திருவோட் டினைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என்ருலும் ஆண்டவன் ஆற்றல்முன் எவருடைய பத்திரம்தான் என் செய்ய இயலும் ? எனவே, இறைவராம் அடியார் தாம் வைத்துச் சென்ற ஒடு மறையுமாறு திருஉளங் கொண்டார். அவ்வுளப்படி ஒடு மறைந்தது. அந்தத் தருணம் இறைவனர் நாயனர் இல்லம் போந்து, தாம் அளித்துச் சென்ற ஒட்டினத் தருமாறு பணித்தார். அங்ங்னம் அடியாராம் இறைவர் எம்முறையில் பணித் தார் என்பதைக் கூறவருகின்ருர் சேவையர்காவலர். அப்படிக் கூற வரும்போது,

வந்தபின் தொண்ட ருைம் எகிர்வழி பாடு செய்து சிந்தைசெய் தருளிற் றெங்கள் செய்தவம் என்று சிற்ப முந்தைகாள் உன்பால் வைத்த மொய்ஒளி விளங்கும் ஒடு தந்துகில் என்ருன் எல்லாம் தான்வைத்து வாங்க வல்லான்

என்று பாடி அருளினர்.