பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

சிண்டுக் காணப்பெறும், ' எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்" என் னும் தொடரின் திரண்ட கருத்து, முன்னர்க் காட்டிய, விண்னும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்' என்ற தொடரில் குறிப்பிடப்பட்ட கருத்துப் பொருளன்ருே ? மணிமொழியார் யாவையும் வைச்சு வாங்குவாய்' என்ப தைத்தான் சேக்கிழார் பெருமாளுர், எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்' என்று கூறியருளினர் என்க. இைறவர் தம் அடியார்மாட்டு வைத்துள்ள அன் புக்கு அளவில்லே. அவர்கள்பொருட்டுத் தாம் எதையும் செய்ய முன்வருவர். அவரைத் தேடி அன்பர்களோ, அடியவர்களோ செல்லவேண்டியதில்லை. அவரே அவர் களின் இல்லங்கட்குச் சென்று அருள்புரிவர். இதற்குச் சான்ருதப் பல அடியவர்களின் வரலாறுகளைக் காட்ட லாம். இப்படி அருளைச் செய்யவரும் இறைவர், தாம் எல்லாம் அறிந்தவராய் இருந்தும், ' தாம் அடியவர் இல்லங்கட்கு நேரே வந்து அருள்புரியவல்லோம்' என் பதை மக்கள் அறிந்து உண்மை அன்பும், தொண்டும் மேற்கொண்டு ஒழுகவேண்டும் என்பதை அறிவிக்கத் தாம் போகவேண்டிய அடியவர் இல்லத்தினுக்கு நேரே செல்லாமல், வழியில் வருவார் போவாரை எல்லாம், 'அடியவர் இல்லம் எங்கே?' என்று வினவிக்கொண்டே செல்வர். இதனைச் சிறுத்தொண்டர் வரலாற்றில் நன்கு காணலாம். இறைவர் சிறுத்தொண்டர், இல்லம் நோக்கி வருகிருர் வருபவர் வழியில்,

சண்டாக கொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக் கண்டாாைர் சிறுத்தொண்டர் மனேவினவிக் கடிதணந்து தொண்டானர்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத் தொண்டர் வண்டாரும் தாரினர் மனைக்குள்ளா சோ என்ன

6