பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

அருள் புரியும் கருத்தினைப் பொதுப்படக் கூறியிருப்பத ல்ை இங்கு எடுத்துக் காட்டப்பட்டதென்க.

- கண்ணப்ப நாயனர் வரலாற்றில் நாயனர் கன்னி வேட்டைமீது கருத்துக்கொண்டு, கானகம் சென்றவர் தாம் வேட்டவாறு வேட்டையாடிய பின்பு, தமக்கு முன்னல் மலை ஒன்று காண, அம்மலையினைக் கண்டு திரும்பத் தம் தோழனை காணனுடன் புறப்பட்டுச் சென்ற நிலையினை ஆசிரியர் அருண்மொழித் தேவர் எழுதும்பேர் இl;

முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன அன்பினே எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல்கூர வள்ளலாம் மலையை நோக்கி என்புகெக் குருகி உள்ளத் தெழுபெரு வேட்கை யோடும்

என்று கூறித் திண்ண்னரிடத்து அமைந்த அன்பின் மாட்சியினே அழகுடன் எடுத்து மொழிந்தார். இத் தொடர்ப் பொருளை மணிமொழியார் வாசகத்தில் உள்ள,

மாறிகின் றென்னை மயக்கிடும் வஞ்சப்

புலனைக்கின் வழியடைத் தமுதே ஊறிகின் றென்னுள் எழுபாஞ் சோகி உள்ளவா காணவர் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே

திருப்பெருக் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த

இன்பமே என்னுடைய அன்பே

என்னும் பாட்டின் கருத்தைத் தழுவிச் சேக்கிழார்

பெருமானர் பாடியுள்ளார் என்று கூறுவது பொருத் தமே அன்ருே ?