பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தமக்கு இறைவர் செய்த அருட்பெருங் கருணைகளையெல்லாம் அகம் கனிய எடுத்து மொழிந்துள்ளார். அப்படி இறைவர் தமக்குச் செய்த அருட்பெருங் கருணைகளுள் ஒன்று, அன்ன ருடைய சித்த விகாரக் கலக்கங்களைப் போக்கித்தெளியச் செய்ததாகும். அதனைத் திருக்கோத்தும்பிப் பகுதியில்,

வைத்த சிதிபெண் டீர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகில் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாாக் கலக்கம்,தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்று சாய் கோத்தும்பீ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலில் வரும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த என்னும் தொடர்ப் பொருள், திருத் தொண்டர் புராணத்துள் திருமூலநாயனர் வரலாற்றில் நாயனர் யோகநிலையில் அமர்ந்த நிலையினைக் கண்டவர் கூற்முகக் கூறும்போது,

பித்தற்ற மயலன்று பிறிதொருசார் புளதன்று சித்தவிகற் பங்களைந்து தெளிந்த சிவ யோகத்தில் வைத்தகருக் கினாாகி வரம்பில்பெரு மையிலிருந்தார்

இத்தகைமை அளப்பரிதால் யாராலும் என உரைப்பார்

என்ற பாட்டில் இருப்பதைச் சிந்தித்தறியலாம்.

இது திருவாசகத்தின் பொருளினைத் தழுவியே கூறப்பட்டுள்ளது என்பது விளங்காமல் போகாது. ஞானநிலை முதிரப்பெற்றவர் திருமூலர். அத்தகைய, பெரியாரது அனுபவ நிலையினைப்பற்றிப் பேசும்போது, அவரைப்போலவே ஞானகிலே பெற்றவர் கூறிய அனுபவ மொழிகளை இணைத்தே பேசவேண்டுவது சால்வும் பொருத்த முடைமையின், மணிமொழியார் வாசகப்