பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளினை மாமூலனர் வாழ்க்கைக் குறிப்பில் இணைத் துப் பேசியது சேக்கிழாரின் அறிவின் ஆழத்தைப் புலப் படுத்துகிறது.

திண்ணனராம் கண்ணப்ப நாயனர் திருக்காளத்தி மலையினைச் சார்ந்தார் ; குடுமித் தேவரைக் கும்பிட்டார்; அவர் அன்பில் ஈடுபட்டார் : அவரைத் தணந்துவர விரும்பாராய் அல் லும் பகலும் அவரைவிட்டு அகலாது, (உணவு கொணரச் சென்றபோது மட்டும் தணந்து) காத்துகின்ருர். இவ்வாறு அரிய இறைவரை எளிய முறையில் கண்டு ஆர்வம் பெருக நின்ற நிலைமையைப் பற்றிச் சேக்கிழார் பெருமானர் குறிப்பிட நேர்ந்தபோது,

சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமார் தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுக கரியார் தம்மை ஆர்வம்முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர்பெற கோக்கி நின் ருர் நீளிருள் நீங்க நின் ருர்

என்று பாடிப் பரவசமுற்ருர்.

இப்பாட்டின் முதல் இரண்டடிகள் இறைவரது அருமைப் பாட்டினே அறிவிப்பனவாகும். இறைவர், தவம் செய்துகொண்டு காட்டில் வாழும் வாழ்க்கையினை உடைய முனிவர்கட்கும் தேவர்கட்கும் காணுதற்கு அரியவர் என்பதே அவ்வருமைப்பாடு. இங்கனம் தவம் பல புரிந்தும் இறைவரைக் காணுதற்கு அரிது என்பதை அழகுற எடுத்துப் பாடியுள்ளார் திருவாதவூரர்.

அவர் பாடிய பாட்டு,

புற்று மாய்மா மாய்ப்புனல் காலே

உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்

வற்றி யாரும்நின் மலாடி காணு

மன்ன l என்னையோர் வார்ச்தையுள் படுத்துப்