பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுன் நின்று, ஊனின உருக்கி உள் ஒளி பெருக்கி வணங்கி நின்ற நிலையினைப் பற்றிச் சேக்கிழார் பெருமா ஞ்ர் பாடும்போது,

அங்கம் எட்டினும் ஐக்கிலும் அளவின்றி வணங்கிப் பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் பொழியும் செங்கண் நீர்தரும் அருவியும் திகழ்திரு மேனி எங்கும் ஆசிதின் றேத்தினும் புகலியர் இறைவர்

என்று பாடி இன்புற்ருர்.

இங்குப் பாலருவாயர் அன்பின் முதிர்வால் ஆனந்தக் கண்ணிர் பொழிந்து, அங்கீர் உடல் முழுதும் தோய்ந்த கிலையில் வணங்கினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பன்த நோக்கின், சேக்கிழார் பெருமார்ைக்குத் திருவாசகத்தில் வந்துள்ள,

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்னேர்

பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளம் தாழ் உறுபுனலில் கீழ்மேல் ஆகப்

பதைத்துருகும் அவர்கிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தாள் நின்ற உச்சி அளவு நெஞ்சாய்

உருகாதால் உடல்பெல்லாம் கண்ணுய் அண்ணு வெள்ளம்தான் பாயாதால் கெஞ்சம் கல்லாம்

கண்ணிணையும் மாமாம்தி வினையி னேற்கே

என்ற திருப்பாட்டின் நினைவுவர அப்பாட்டின் பொருளைத் தழுவி இங்ஙனம் தாமும் தம் நூலில் தோணிபுரத்தோன்றல் மனம் கசிந்து வணங்கி நின்ற நிலையினைப் பாடியருளினர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமே என்பது புலகிைறது.

பெரிய புராணத்தில் நேச நாயனர் என்பவர் ஒருவர். இவர் காம்பீலி நகரத்தில் சாலியர் குலத்தில்