பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றியவர். அதாவது ஆடை செய்யும் தொழிலுடை மரபினர் என்பது. இவர் மனத்தால் இறைவரைச் சிந்தித்து, வாக்கால் திருவைந்தெழுத்து ஒதுபவர். தம் திருக்கரத்தால் கீள், கோவனம் நெய்து சிவனடியார் கட்கு ஈந்து இன்புறுபவர். இவரைப் பற்றிச் சேக்கிழார் பாடும் பாடல்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று.

ஆங்கவர் மனத்தின் செய்கை அானடிப் போதுக் காக்கி ஒங்கிய வாக்கின் செய்கை உயர்த்த ஐஞ்ஞெழத்துக் காக்கித் தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிாான் அடியார்ச் காகப் பாங்குடை உடையும் கீளும் பழுகில்கோ வணமும் செய்வார் என்பது.

இந்தப் பாடலேயும், திருவாசகத்தில் திருச்சதகப் பகுதியில் மூன்ருவதான சுட்டறுத்தல் என்னும் தலைப் பின்கீழ் உள்ள ஆருவது பாடலாகிய,

சிந்தனநின் தனக்கு ஆக்கி நாயி னேன்.தன்

கண்ணினைகின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன்

மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை

மாலமு தப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித்

தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே என்ற பாடலையும், அன்பர்கள் ஆழ அழுந்தப் பன்முறை யும் பயின்று ஓதி அருளுமாறு வுேண்டுகிறேன். இங்ங் னம் ஒதியதன் முடிபு, 'இவ்விரு பாடல்களின் கருத்தும் ஒன்றுபவிட இயைந்துள்ளது' என்பதை மறந்தும் கூற முடியாது என்பது புலகுைம். இவ்விரு பாடலிலும் ' ஆக்கி" என்னும் மொழி பயிலப்பட்டு வந்துள்ளது. ' மனத்தின் செய்கை அரனடிப் போதுக்காக்கி ' என்

7