பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

- எப்படி இடையில் மேடும் இரு பக்கமும் பள்ளமுமாக

இருக்குமோ அப்படி இருக்கிறது.

குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்.

(மான்குளம்பு அழுத்திய இடத்தைப் போல இரு பக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த குடத்தினையும். குளம்பு என்றது குளப்பு என விகாரமாயிற்று. கவடு-இரு பக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த சுவட்டைப் போன்றது. பத்தல்-குடம் j .

யாழை மூடிய உறை சிவப்பாக இருக்கிறது. விளக்கி னுடைய எரிகின்ற நிறத்தைப் போன்றது. அது. அதை இறுக்கித் தோற் போர்வையினல் மூடியிருக்கிருர்கள்.

விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை X

(ఆLు ఒశ్రీ - எரிகின்ற, கின்ற. விசியுறு - இழுத்துக் கட்டிய பச்சை. போர்த்த தோல்.

யாழின் மேற் போர்வையைத் தைத்துப் போட்டிருக் கிருர்கள். இன்னும் என்ருகத் தெரியாத இளஞ்சூல் யுடைய சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மெல்லிய தாகம்யிர்தொடர்ந்திருப்பது போல அந்தத் தையல் இருக் கிறது.

எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை. அறியமுடியாத இளைய கருப்பத்தையுடைய செந்நிற முடையோளுடைய அழகிய வயிற்றில்,மெல்லிதாக மயிர் தொடர்ந்திருந்த காட்சியைப் போல, தைத்து மூடிய போர்வை. - -