பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 5

(எய்யா. அறிய முடியாத, செய்யோள் - சிவந்தநிறம் உடையவள். சிவந்த மேனியில் மயிரின் ஒழுங்கு மெல்லிதாக இருந்தாலும் நன்ருகத் தெரிகிறது. ஐது - மெல்லிது. ஒழுகிய நீண்ட பொல்லம் பொத்திய - தைத்த. பொதி உறு - பொதிந்து வைத்த.) -

குடத்தைத் தைப்பதற்கு ஆணிகளை முடுக்கியிருக்கிருர் கள். அந்த ஆணிகள் வளையில் வாழும் நண்டுகளின் கண் களேப் போல.இருக்கின்றன.

அளவாழ் அலவன் கண்கண் டன்ன துளை வாய் தூர்ந்த துரப்பமை ஆணி.

(வளையில் வாழும் கண்டுகளின் கண்களைக் கண்டாற் போன்ற துளைகளின் வாயை மூடி முடுக்கிய முடுக்குதல் அமைந்த ஆணியையும். அளே . வளே. அலவன்- கண்டு. துளை குடம் இரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைப்பதற்காக அமைத்த முடுக்குதல் அமைந்த ஆணி)

வின்யில் கலப்புறம் வளைந்திருக்கிறது. அதன் முடிவில் மேல்நாக்கு இல்லாமல் அமைந்த வறிய வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அந்த வாய் எட்டு நாள் ஆன பிறை யைப் போல இருக்கிறது.

எண்ணுள் திங்கள் வடிவிற்று ஆகி அண்ணு இல்ல அமைவரு வறுவாய். (பர்ணிமைக்கு எட்டாம் நாளில தோற்றும் சந்திர னுடைய வடிவத்தைக் கொண்டதும், உள்நாக்கில்லாத பொருந்துதலையுடைய வறிய வாயினையும். திங்கள்.

சந்திரன். அண்ணு - உள்ாேக்கு அமைவரு அமைதலே உடைய வறு வாய் - காக்கு இல்லாத வெறும் வாய்.1