பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பொருள் ஆற்றுப்படை விளக்கம்

யாழினுடைய தண்டு பாம்பு தலையெடுத்தர்ற் போல ஓங்கின தண்டை கரிய தண்டை உடையதாக உள்ளது.

பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின், (பாம்பு தலை யெடுத்தாற் போன்ற ஓங்கின. கரிய

தண்டையும், அணந்தன்ன - தலையெடுத்தாற் போன்ற. ஓங்கு - நீண்ட இரு கரிய, மருப்பு - தண்டு.)

யாழில் வாரைக் கட்டியிருக்கிருர்கள். அது கரிய நிறத்தை உடைய பெண்ணின் முன் கையில் - அழகினே யுடைய முன் கையில் அணிந்த இரு கைகளிலும் ஒத் தனிந்த வளைகளைப் போல உள்ளன. -

மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும். மாயோள் - கரிய நிறமுடைய பெண். ஆய்தொடி. ஆய்ந்து அணிந்த જટિઝ, கடுக்கும் - ஒக்கும்.)

நரம்புகளை ஒன்றெடொன்று நெருக்கமாக அமையும் படி திண்ணிய கட்டுதலையுடைய வார்க்கட்டை உடைய தாக இருக்கிறது. - - -

கண்கூடு இருக்கைத் திணிபிணித் திவவின். (ஒன்ருேடெரன்று கூடும்படி இருத்தலையுடைய திண்ணியதாகப் பிணித்தலைப் பெற்ற நரம்புக்கட்டையும்.

கண் கூடு இடம் கூடிய பிணி கட்டு. திவவுநரம்புக்கட்டு.) .

விரலால் சுண்டி,அசைக்கும் நரம்புகளை உடைய யாழ் அஆஅது அதிசய ஆழகினேயுடைய தினயைக் குத்தின் அரிசிபோல இருக்கிறது. குற்றம் சிறிதும் இல்லாத நரம்புகள் அவை.