பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {} பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

அந்த விறலியின் கூந்தல் கருமணலப் போலக் கருமை

யாக இருக்கிறது. அவ்ஸ் அழகிய நெற்றியோ பிறை

போலத் தோற்றம் அளிக்கிறது. x -

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதல்.

அறல் போன்ற கூந்தலையும் பிறை போன்ற அழகிய நெற்றியையும் உடைய அறல் - கருமணல். துதல் . நெற்றி.) -

அவளுடைய புருவம், கொலே செய்வதற்காக வளைந் திருக்கும் வில்லைப் போல உள்ளது. அவளுடைய கண்கள் வளமான கடைசியையுடைய குளிர்ச்சியைப் பெற்றனவாக இருக்கின்றன.

கொல்விற் புருவத்துக் கொழுங்கண்ட மழைக்கண். கொல - செய்வதற்குரிய ఐవజు போன்ற புருவத் தையும் வளமுடைய ஒரத்தையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணையும் உடைய. ... •

கொலை செய்வதற்காக வில்லை வளை ப்பார்கள். அந்த வளைந்த தோற்றத்தை உடையதாக இருக்கிறது. புருவம். கடைக் கண்ணுல் பார்த்தல் மகளிர்க்கு அழகாதலால் கொழுங்கடைக்கண் என்ருர் மற்றச் சமயங்களில் குளிர்ச்சியான பார்வையை உடையதாதலின் மழைக்கண்' ஆயிற்ற். மழை - குளிர்ச்சி ஆகுபெயர்)

அவளுடைய வாய் இலவம் பூவின் இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்து வரும் சொல் இனிமையாக இருக்கிறது.

. இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர் வாய்.

கோங்கிலவின் இதழை ஒத்ததும் இனிய மொழியைப் பேசுவதுமாகிய செந்நிறமுள்ள வாய். புரையும் . ஒக்கும். துவர் சிவப்பு.