பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 1 t

அவள் பற்கள் வெள்ளே வெளேரென்று உள்ளன. முத்துக்களை வரிசையாக வைத்தது போன்ற காட்சியை அளிக்கின்றன. அந்தப் பற்கள் சிறிதும் குற்றம் இல்லாமல் உள்ளன. - * , ,

பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்.

(பலவாகக் கோத்துவைத்து முத்தைப் போன்றனவும், குற்றம் நீங்கிய வெண்மையான பற்களையும்.

பலஉறு. முத்தின் - பலவாக வரிசையாக அமைக்கப் பெற்ற முத்தைப் போல. பழி - குற்றம்.) .

அவளுடைய காதுகளில் பொலிவுபெற்ற குமுைகளே அணிந்திருக்கிருள். மயிரை கறுக்குகின்ற் கத்திரியின் பெருமையையுடைய அடிப் பக்கத்தைப் போல அவை உள்ளன. அந்தக் காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன. அந்த அணிகலத்தைக்கூடப் பாரமாக அணிந்திருக்கிருள் அவள். அவ்வளவு மென்மையுடையவள் அவள் .

மயிர்குறை கருவி மாண்கடை அன்ன பூங்குழை ஊசற் பொறைசால் காதின்

|மயிரைக் கத்திரிக்கின்ற கத்திரிக்கோவின் பெருமை பெற்றி அடிப்பகுதியைப் போன்ற பொலிவு பெற்ற குழை யானது ஊசலைச் செய்யும் பாரத்தையுடைய காதையும்.

குறைத்தல் . கத்தரித்தல். கத்தரிக் கோலில் விரல்களை விட்டு உபயோகிக்கும் துவர்ாங்களேயே மாண் கடை அன்ன என்ருர். அந்தத் துவாரம் இல்லாவிட்டால் விரலை வைத்துக் கத்திரிக்க முடியாமையால் அது மாண் கடை" ஆயிற்று. பூங்குழை -பொலிவு பெற்ற காதணி, பூ வேலை செய்யப் பெற்ற காதணி எனலும் ஆம். அது ஊசலாடுவது