பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பொருநர் ஆற்றுப்படை விளக்கம் . அணங்கு t- வருத்தம்: கண்டார் இதைத் தழுவ இயல வில்லையே என்று வருந்தும் வருத்தம். உருத்த.தோன்றின. சுணங்கு - அழகுத்தேமல். ஆரம் - மார்பு. வனம் - அழகு.) அவளுடைய கொப்பூழ் நீரிலே உள்ள சுழியைப் போல உத்தம இலக்கணங்கள் நிறைந்ததாக இலங்கு கிறது. -

நீர்ப்பெயர்ச் சுழியின் கிறைந்த கொப்பூழ் |நீரிலே பெயர்தலையுடைய சுழியைப் போல இலக் கணங்கள் நிறைந்த கொப்பூழ். பெயர் சுழி - பெயர்தலே உடைய சுழி.) - - -

அவளுடைய இட்ை உண்டோ இல்லையோ என்று உணர முடியாமல் தனபாரங்களால் வருந்துகிறதாக உள்ளது. * ... . - . . . .

உண்டென உணரா உயவுறு நடுவின். (உண்டென்று பிறரால் உணரப்படாத, வருந்தும் இட்ையினையும். உயவுறு. வருந்தும் தனபாரத்தால் வருந்தியது. நடு - இடை.) - -

. அவளுடைய இரகசியத்தானம் பல வண்டினங்களின் இருப்பைப் போல இருக்கிறது. பல மணி கோத்த வ்டங் களை மேலே அணிந்திருக்கிருள். -

வண்டிருப்பு அன்ன பல காழ் அலகு.

(வண்டுகளின் இருப்பைப் போன்ற, பல மணிகளைக் கோத்த வட்ங்களே அணிந்த இரகசியத்தானம். .

காழ் - மணி. இங்கே வடத்துக் காயிற்று: ஆகுபெயர்.)