பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 5

அவளுடைய துடைகள் செறிந்தும் திரண்டும் உள்ளன. பெரிய பெண் யானையின் விசாலமான கையைப் போல அவை உள்ளன. . . .

இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின்.

(பெரிய பெண் யானையின் விசாலமான கையைப்போல - நெருங்கித் திரண்ட துடையையும்.

இரும்பிடி. பெரிய பெண் யான. குறங்கு துடை)

அவளுடைய அடி சிறியதாக இருக்கிறது. கணக் காலுக்குரிய இலக்கணங்கள் என்று சொல்வனவெல்லாம். பொருந்தி, ஒழுங்கான மயிரையும், ஏனே இலக்கணங்களே யும் திருத்தமாகப்பெற்ற காலையுடையவள். அவளுடைய காலுக்கு ஏற்ற வகையில் பொருத்தமாகவும் பெருமை உடையதாகவும் இருக்கிறது அவளுடைய பாதம்.

பொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாப்கு ஒப்ப வருந்துநாய் காவிற் பெருந்தகு சீறடி.

(பொருந்திய மயிர் - ஒழுங்காக உள்ள திருத்தமாகிய காலுக்கு ஏற்ப, ஒடி இளைத்த நாயின் நாவினைப் போலப் பெருமையையும் தகுதியையும் உடைய சிறிய அடியையும்.

ஒழுகிய தொடர்ந்து வளர்ந்த திருந்து - திருத்த முடையதாகிய. வருந்துநாய் ஒடி இளைத்த நாய். அது காவைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருக்கும். அதைப் போன்ற மென்மையும் செம்மையும் உடைய அடி) -

அரக்கை உருக்கி வைத்தாற் போல செம்மையும், வெம்மையும் உடைய கிலத்தில் கடந்ததனாலே சுக்கான் கல்லாகிய பகையாலே வருந்திய வருத்தத்தோடு, பொருந்தி யிருக்கிருள். . • - - - -