பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

தொடையலையும், காட்சியையும் உடைய பாலையாழை, வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும், கன்மொழி சிதறி, கூந்தலும் துதலும் கண்னும் வாயும் பல்லும் காதும் விருத்தும் தோளும் முன் கையும் விரலும் முலையும் கொப் பூழும் நடுவும் அல்கு லும் குறங்கும் அடியும், செக்கிலன் ஒதுங்கலின் கடை இடை விலங்கலின், அல்கித் தாங்கிக் கழிப்பிய பின்றை, பாடல் பற்றிய கோடியர் தலைவ, கொண்டதறிக' என்று கூட்டி வினே முடிவு செய்க. -

எங்கே போவது என்று தெரியாமல் வழிபெயர்ந்து திரிந்து நீங்காமல் நான் வரும் வழியின் எதிரில் பட்டாயே; இது செய்த தவத்தின் பயன்தான்'

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் தோற்றதன் பயனே. (எங்கே போவது என்று தெரியாமல் வழிமாறி ங்ே காமல் நான் வரும் வழியில் எதிர்ப்படுதலும் நீ பண்ணிய தவத்தின் பயனே. -

நெறி-வழி. திரிந்து-மாறி. ஒராஅது நீங்காமல். ஆறு-வழி. கோற்றது - தவம் செய்தது. என்னைக் கண்டது 鹰 தவம் செய்ததன் பயன் என்பதல்ை இனி அவனுக்குக் கிடைக்கப் போகும் நலத்தைக் குறிப்பிடுகிருன்.

அரசவைகளில் அரசர்களை மேம்படுத்திக் கூறுபவனே, நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக.

போற்றிக் கேண்மதி: புகழ்மேம் படுக! நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக, புகழில் மேம்பட்டவனே! -: . . . . . . .

(போற்றி கவனமாக ஏற்று. கேண்மதி - கேட்பா யாக, புகழ் மேம்படுக - புகழில் மேம்பட்டவனே என் பதும் பொருந்தும்.) .