பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

என் கையில் வைத்திருந்த் உடுக்கையை அடித்தேன். படம் விரித்த பாம்பினேப் போல் அடித்து அடித்து என் கையின் வடுப்பட்டுக்கிடந்த அடிக்கும் இடம் அகன்ற தடாரி அது. - -

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக் கைக்கசடு இருந்த கண்ணகன் றடாரி. (படம் விரித்த பாம்பினது பொறியைப் போல என் கையினது வடுப்பட்டுக்கிடந்த, அடிக்கும் பக்கம் அகன்ற அந்த உடுக்கையில் தோற்றுவித்த பைத்த - படம் விரித்த. பொறி . புள்ளிகள், கசடு , வடு கண் அடிக்கும் பக்கம்.) அப்போது கள்ளிருள் போய் விடிந்திருந்தது. விடி வெள்ளி முளைத்திருந்தது. அப்போது இரட்டைத் தாளக் திற்கும் பொருந்த ஒரு பாட்டினே யான் பர்டினேன். அப்போது நடந்தது என்ன தெரியுமா? ; :

இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரிகதிர் வெள்ளி முளைத்த கள்ளிருள் விடியல். -- (இரட்டைத் தாளத்துக்கு இசையும்படி, விரிந்த கதிரையுடைய விடிவெள்ளி உதயமான செறிந்த இருந்த அந்த விடியற் காலத்தில்,

இருசீர்ப்பாணி இரட்டைத் தாளம். வெள்ளி - விடி வெள்ளி. விடியல் - விடியற் காலே.)

ஒரு பாட்டினை யான் விரும்பிப்பாடுவதற்கு முன்ன்ே. (இது கடந்தது. - -

ஒன்றியான் பெட்டா அளவையின்.

- (ஒரு பாட்டை யான் விரும்பிப்பாடுவதற்கு முன்ன்ே.