பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 29

பிறகு அவனுடைய Gశామము நிறைந்த அரண்மனையில் ஓரிடத்தில் தங்கினேன். -

- மற்று அவன் திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி. (அவனுடைய செல்வம் தழைக்கும் அரண்மனையில் ஒரு பக்கத்திலே தங்கி. .

திரு செல்வம், கிளர் - மேன்மேலும் தழைக்கும். கோயில் - அரண்மனை. ஒரு சிறை - ஒரு பக்கத்தில். அரண்மனை பெரிதாதலின் அங்கே ஒரு பக்கத்தில் தங்கினன்.)

தவம் புரிகிறவர்கள் இந்திரிய நிக்கிரகம் செய்து மனத்தை ஒருமைப்படுத்திக் கடவுள் தியானத்தில் ஈடு பட்டால் இந்த உடம்பு இறப்பதற்கு முன்னே தவத்தின் பயனுகிய பேரின்பத்தை இந்த உலகத்திலேயே பெறுவார் கள். அதன்ேச் சிவன் முக்தி என்பார்கள். நான் பெற்ற. இன்பம் அவர்கள் பெற்ற பேரின்பத்தைப் போல இருந்தது. -

- தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது

அதன் பயம் எய்திய அளவை மான. (தவம் செய்யும் தவசிகள் தம்முடைய உடம்பை இங் |கிலத்திலே விட்டு மறையும் மரணத்துக்கு முன்பே அந்தத் தவத்தின் பயனகிய பேரின்பத்தைப் பெற்றது போல.

உடம்பு இடாஅது - உடம்பை நிலவுலகத்தில் விட்டு விடர்மலே. அதன் பயம் - அந்தத் தவத்தினற் கிடைக்கும் பயனகிய பேரின்பத்தை; பயம் பயன். அளவைமான. முறையைப் போல.1.

வழிநடத்த வருத்தம் எல்லாம் இப்போது அறவே அகன்று போகும்படி செய்தான். அப்படியும் நடந்து