பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 33

அவனிடம் சென்றவுடன் நாங்கள் முறைப்படி அவனே வணங்கி அவன் அன்பைப் பாராட்டினோம்.

அதன்முறை.கழிப்பிய பின்றை. (அவனேக் கண்ட பொழுது நாங்கள் செய்ய வேண்டிய வற்றை முறைப்படி செய்து முடித்த பின்பு.

அதன் முறை அவன்க் கண்டபோது செய்ய வேண்டி முறைகள்; என்றது வணங்குதல், வாழ்த்துதல் என்ப வற்றை. கழிப்பிய - செப்து முடித்த பின்றை பிறகு.)

அவன் செய்த உபசாரங்கள்

அதன் பின் எங்களுக்கு கடந்த உபசாரங்களே என்ன வென்று சொல்வேன்! அறுகம் புல்லால் திரித்த பழுதை யைத் தின்ற செம்மறியாட்டுக் கிடாயின் அழகினையுடை யதும் ஆகிய பெரிய மேல்துடையின் நெகிழ வெந்ததனே விழுங்குங்க்ள் என்று பல முறையும் வற்புறுத்தின்ை.

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பரா.அரை வுேவை பருகு எனத் தண்டி.

..(அறுகம் புல்லால் திரித்த, செம்மறிக் கிடாயினது. அழகினையுடைய வேக வைத்த பெரி மேல் துடையில் நெகிழ வெந்த புலாலே இவற்றை விழுங்குவீர்களாக' எனப் பலமுறை வற்புறுத்திச் சொல்லி. -

துராய் அறுகம் புல்லால், திரித்த புழுதை. துருவை. செம்மறிக்கிடாய், புழுக்கு - வேக வைத்த ஊன், பரா அரை - பழுத்த துடை, வேவை - வெந்த ஊன். பருகு. உண்க. தண்டி பல முறை வற்புறுத்திச் சொல்லி. இத்தகைய உணவை முன்பு உண்டவர்களாதலின் சற்றே

3 -